ஆன்மிகம்

தக்கலை மெஞ்ஞான மாமேதை செய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழாவில் ஞானபுகழ்ச்சி பாடும் நிகழ்ச்சி

Published On 2018-04-02 07:18 GMT   |   Update On 2018-04-02 07:18 GMT
தக்கலை மெஞ்ஞான மாமேதை செய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழாவில் ஞானபுகழ்ச்சி பாடும் நிகழ்ச்சி இரவில் நடைபெற்றது. இதில் குமரி, கேரளாவை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
குமரி மாவட்டம் தக்கலையில் மெஞ்ஞான மாமேதை ஷேக் பீர்முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது. இது சிறப்பு வாய்ந்த தர்காக்களில் ஒன்றாகும்.

ஷேக் பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா இந்த தர்காவில் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று இரவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஞானபுகழ்ச்சி பாடும் நிகழ்ச்சி தொடங்கி அதிகாலை வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. ஏராளமானோர் ஒன்றாக சேர்ந்து பாடினர். தர்கா பெருவிழாவில் குமரி மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்த திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

தர்காவுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் நாகர்கோவில் உள்பட முக்கிய ஊர்களில் இருந்து தக்கலைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News