ஆன்மிகம்

கபூலாசாஹிபு தர்காவில் கந்தூரி விழா

Published On 2016-12-17 06:51 GMT   |   Update On 2016-12-17 06:51 GMT
காரைக்கால் ரெயில்நிலையம் அருகில் உள்ள கபூலாசாஹிபு தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காரைக்கால் ரெயில்நிலையம் அருகில் உள்ள கபூலாசாஹிபு தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம்பூசும் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது மகானின் சமாதி மீது சந்தனம் பூசப்பட்டது. தொடர்ந்து துஆ ஓதப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு பரிஜன்ஜி மவுலூது ஓதப்பட்டது. இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் பத்ருசஹாபாக்கள் மவுலூது ஓதப்படு கிறது. நாளை (ஞாயிறு) மகானுக்கு குர்-ஆன் ஓதி ஹதியா செய்யப்படுகிறது. 19-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் ஹாஜா செய்யது முகமது உமர், ஹம்ஜா முகையதீன் மாலிமார் மற்றும் பலர் செய்து உள்ளனர்.

Similar News