ஆன்மிகம்
கடன் பிரச்சனை விரைவில் தீர வேண்டுமா? அப்ப இந்த நேரத்தை மறக்காதீங்க....

கடன் பிரச்சனை விரைவில் தீர வேண்டுமா? அப்ப இந்த நேரத்தை மறக்காதீங்க....

Published On 2021-11-30 14:11 IST   |   Update On 2021-11-30 14:11:00 IST
கடன் கழுத்தை நெரிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும் என்பது ஐதீகம்.
கடன் கழுத்தை நெரிப்பவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும். சுப செயலான நகை வாங்குவது, தொழில் தொடங்குவது, நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம். திருமணத்தை நடத்தக் கூடாது. அது போல் கடன் வாங்குவது, பிரேதத்தை தூக்குவது போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கிழமைகள்    குளிகை நேரம்
    
ஞாயிறு     3 மணி முதல் 4.30 மணி வரை       
திங்கள்    1.30 மணி முதல் 3 மணி வரை    
செவ்வாய்    12 மணி முதல் 1.30 மணி வரை     
புதன்    10.30 மணி முதல் 12 மணி வரை    
வியாழன்    9 மணி முதல் 10.30 மணி வரை    
வெள்ளி    7.30 மணி முதல் 9 மணி வரை    
சனி    6 மணி முதல் 7.30 மணி வரை    

கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தினசரி குளிகை கால காலத்தை பயன்படுத்தி கடனை திரும்பச் செலுத்தினால் விரைவில் கடன் தீரும். மிகக் குறிப்பாக செவ்வாய்கிழமை பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள் சனிக்கிழமை காலை 6- மணி முதல் 7.30 மணிக்குள் கடனில் சிறுபகுதியை கொடுத்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கடன் அடைபடுவதை காணலாம்.

Similar News