ஆன்மிகம்
மகாபலேஸ்வரர் திருக்கோவில்

திருமணம் விரைவில் நடக்க வழிபட வேண்டிய திருக்கோவில்

Published On 2021-06-05 07:46 GMT   |   Update On 2021-06-05 07:46 GMT
சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் பிசாசு மோட்சம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும்.

திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் துளுவ நாட்டில் உள்ள தலமாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது.

சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

இராவணன் எடுக்க கடும் முயற்சி செய்ததால் லிங்கத் திருமேனி பசுவின் காது போல் வளைந்து நீண்டது. அதனால் இத்தலம் 'கோகர்ணம்' என்று அழைக்கப்படுகிறது. கோ - பசு, கர்ணம் - காது. அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் பாணம் இல்லாமல் துவாரம் மட்டும் உள்ளது. அந்த துவாரத்தில் நீர் பால் போன்ற அபிஷேக பொருட்களால் நாமே அபிஷேகம் செய்யலாம். மலரிட்டு வணங்கலாம். கைவைத்து தொட்டு வழிபடலாம். மூலவர் சன்னதிக்கு பின்புறம் அம்பாள் சன்னதி உள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஆத்ம லிங்க பூஜை நடைபெறுகிறது. தற்போது குழியாக இருக்கும் இடத்தில் உள்ள பீடத்தை அகற்றி லிங்கத்தை வெளியில் எடுத்து பூஜை செய்கின்றனர்.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

இத்திருக்கோயில் கோகர்ணம் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ரயில் மூலம் குண்டக்கல் வழியாக ஹூப்ளி வரை சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் செல்லக்கூடிய தலம். மங்களூரிலிருந்தும் பேருந்துகள் உள்ளன

 முகவரி : அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்,
திருக்கோகர்ணம்-576 234. உத்தர் கன்னடா மாவட்டம்,
 கர்நாடகா மாநிலம். Ph:08386 - 256 167, 257 167
Tags:    

Similar News