ஆன்மிகம்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

திருமண வரம் அருளும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

Published On 2021-05-07 06:07 GMT   |   Update On 2021-05-07 06:07 GMT
இந்த கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில், பாதாளேசுவரருக்கு திருமணமாகாதவர்கள் சிறப்பு வழிபாடாக பச்சை கற்பூரத்தை பன்னீரில் கலந்து அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சேலத்தில் இருந்து மேற்கில் 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்.

இந்த கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில், பாதாளேசுவரருக்கு திருமணமாகாதவர்கள் சிறப்பு வழிபாடாக பச்சை கற்பூரத்தை பன்னீரில் கலந்து அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

மேலும் இந்த பாதாள அறையில் இருந்து அமரகுந்தி அரண்மனைக்கு சுரங்க பாதை இருந்ததாகவும் கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பாதையை மறைத்து பாதாள லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையில் கோவில் நடை திறந்திருக்கும்.
Tags:    

Similar News