ஆன்மிகம்
துளசி வழிபாடு

துளசியை வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகள்

Published On 2021-05-06 05:04 GMT   |   Update On 2021-05-06 05:04 GMT
துளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய்வேத்தியதுடன் வணங்கலாம். இந்த துளசி வழிபாடு ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம்.
முக்கியமாக வாஸ்துவின் அடிப்படையில் துளசியை வடகிழக்கு மூலையில் கீழ்மட்டமாகத் தரையில், நீர்த் தொட்டி முன்பு அல்லது கன்னி மூலையில் அதாவது தென்மேற்கில் கொஞ்சம் உயர மாடத்தில் வைத்து வளர்க்கலாம்.

துளசி சுற்றி தீட்டு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த துளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய்வேத்தியதுடன் வணங்கலாம். இந்த துளசி வழிபாடு ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம்.

துளசி அருகில் செல்பவர்கள் மாமிசம் உட்கொள்ளக்கூடாது முக்கியமாகப் பெண்களின் தீட்டு, எச்சில் ஆகாது. வீட்டில் ஒரு பாசிட்டிவ் எனெர்ஜியுடன் ஒரு புது காற்று பரவும், தரித்திரம் அகலும் மஹாலக்ஷ்மி வீட்டிற்கு வருவாள்.

துளசியில் மகாதேவன், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் அனைத்து தேவதைகளும் குடிகொண்டு உள்ளார்கள். துளசியை மூன்று நாள்கள் பூஜையில் வைக்கலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், துவாதசியில் துளசியைப் பறிக்கக் கூடாது.

விஷ்ணுவின் மனைவியாக பிருந்தா என்கிற துளசியை கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர், துளசி தேவியை மணந்ததாக ஒரு ஐதீகம். அன்றைய தினத்துக்கு ‘பிருந்தாவன துவாதசி ‘ என்று வழிபடுவார்கள். கர்நாடகாவில், சின்ன தீபாவளி என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றிச் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.

தென் மற்றும் ஒருசில வடமாநிலங்களில் இந்த பண்டிகை மிக விமரிசையாக வழிபடுவார்கள். துளசியை தினமும் வழிபட்டால் பில்லிசூனியம் அகலும், திருமணம் கைகூடும், மனக்குழப்பம் குறையும், சுப நிகழ்ச்சிகள் நிகழும், புதன் தோஷம், சத்ரு தொல்லை, பித்ரு தோஷம் மற்றும் வாஸ்து தோஷம் உங்களை விட்டு விலகும்.
Tags:    

Similar News