ஆன்மிகம்
திருவிசநல்லூர் சிவயோகிநாதர் கோவில்

பெண் பாவத்திற்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் வழிபட வேண்டிய கோவில்

Published On 2021-04-19 06:24 GMT   |   Update On 2021-04-19 06:24 GMT
இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கினால், முற்பிறவியிலோ அல்லது இப்பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.

திருவியலூர் என்று புராண காலத்தில் அழைக்கப்பட்ட, திருவிசநல்லூர் திருத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு சிவயோகிநாதர் கோவில் அமைந்துள்ளது.

இறைவன்- சிவயோகிநாதர், யோகநந்தீஸ்வரர். இறைவி- சவுந்திரநாயகி. இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கினால், முற்பிறவியிலோ அல்லது இப்பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.

பெண்களின் பாவத்திற்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர், சுகம் பெறுவர். நந்தி தேவர், எமதர்மனை விரட்டி அடித்த தலம் இது என்பதால், இத்தல இறைவனுக்கு யோக நந்தீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். எமனை நந்தி விரட்டியடித்ததால், இது மரண பயம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது
Tags:    

Similar News