ஆன்மிகம்
பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்

கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய கோவில்

Published On 2021-02-21 03:51 GMT   |   Update On 2021-02-21 03:51 GMT
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு “பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம்” என்ற புராணப்பெயர்கள் உண்டு. இத்தல இறைவன் “களர்முளை நாதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார்.

சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார். 80 அடி உயர ராஜ கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும்; கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,
திருக்களர்,
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம்.
Tags:    

Similar News