ஆன்மிகம்
விநாயகர்

திருமண தடை நீக்கும் திருநீர்மலை ஸ்ரீதூமகேது விநாயகர்

Published On 2019-09-05 06:02 GMT   |   Update On 2019-09-05 06:02 GMT
ஒரு பெண் ஜாதக அமைப்பில் ராகு-கேதுவால் தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்பட்டாலும், மற்ற கிரக தோஷங்களால் தடை ஏற்பட்டாலும், திருநீர்மலை ஸ்ரீதூமகேது விநாயகர் ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் விலகி திருமணம் நடைபெறும்.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் சென்னையில் உள்ள திருநீர்மலை புராணகால முக்கியத்துவம் பெற்றது. இங்குள்ள மணிகர்ணிகா தடாகம் என்ற திருக்குளத்தின் கரையில்தான் ராகு-கேது தோஷங்களை போக்கும் தூமகேது விநாயகர் ஆலயம் உள்ளது. தூமம் என்றால் ராகு என்றும், கேது என்றால் ஞானகாரகன் கேதுவையும் குறிக்கும். இந்த இரண்டு ரூபமும் சேர்ந்தவர்தான் தூமகேது கணபதி. மேலும் ஆகம வரிசைப்படி, புகை வடிவ தூமராசன் என்ற அரக்கனை அழித்த ரூபமான தூமகேது என்றும் புகழப்படுகிறார்.

ஒரு பெண் ஜாதக அமைப்பில் ராகு-கேதுவால் தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்பட்டாலும், மற்ற கிரக தோஷங்களால் தடை ஏற்பட்டாலும், இந்த ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் விலகி திருமணம் நடைபெறும். திருமணம் நீண்ட நாட்களாக தடைபட்டால், அதற்குரிய பரிகாரத்தை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று காலை எட்டு மணி முதல் பதினோரு மணி வரை, நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்காக, சந்தான கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.

விசேஷ திராவிய ஹோமம் முடிந்ததும், மிகப்பெரிய வலம்புரி சங்கால் பால் அபிஷேகம் தூமகேது கணபதிக்கு நடத்தப்பட்டு, அன்று வரும் அனைத்து கணவன்-மனைவிக்கும் சங்கு பால் பிரசாதம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News