ஆன்மிகம்
விநாயகர்

தடைகளை நீக்கும் திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர்

Published On 2019-09-03 06:12 GMT   |   Update On 2019-09-03 06:12 GMT
திருவலஞ்சுழி தலத்தில் உள்ள ஸ்ரீசுவேத விநாயகரை வழிபாடு செய்தால் தொழில், வேலையில் ஏற்படும் அனைத்து விதமான தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
தேவர்கள் பிள்ளையாரை வழிபடாமல் திருப்பாற்கடலை கடைந்ததால், காரியம் தடைபடவே, தேவேந்திரன் கடலின் நுரையையே பிள்ளையார் சிலையாக்கி பூஜித்தான். இதனால் அவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது. பிறகு திரும்பும்போது, இந்த பிள்ளையாரையும் தங்களுடன் எடுத்து சென்றார்கள். வழியில் திருவலஞ்சுழி தலத்தில் வைத்து சிவபூஜை செய்தவர்கள், மீண்டும் விநாயகரை எடுக்க முயன்றபோது, அவரை அசைக்கக் கூட முடியவில்லை.

ஆகவே, இந்த பிள்ளையாரை இங்கேயே பிரதிஷ்டை செய்து, பிள்ளையாருக்கு நிறைமணித் திருவிழா முதலான வைபவங்களை நிகழ்த்தி வழிபட்டு தேவலோகம் சென்று விட்டனர்.

சுவாமி மலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் வழிபாடு செய்தால் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News