ஆன்மிகம்
நெய்யாடியப்பர் சிவாலயம்

நோய் தீர்க்கும் நெய்யாடியப்பர் சிவாலயம்

Published On 2019-08-22 08:20 GMT   |   Update On 2019-08-22 08:20 GMT
நெஞ்சு தொடர்பான நோய்கள் உள்ளவர்களும், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களும் நெய்யாடியப்பர் சிவாலயத்திற்கு வந்து நெய் அபிஷேகம் செய்தால், நோய் பாதிப்பு விலகும் அல்லது குறையும் என்று உள்ளூர் அர்ச்சகர் தெரிவித்தார்.
திருவையாற்றுக்கு மிக அருகில் விளங்குகிற திருநெய்த்தானம், சப்த ஸ்தானங்களில் ஏழாவது ஆகும்.

சிறிய கிராமமான இந்த ஊரின் நடுவில் அடக்கமான கம்பீரத்தோடு நெய்யாடியப்பர் சிவாலயம் திகழ்கிறது. இந்த தலத்தின் பின்னணில் உள்ள வரலாறு வருமாறு:-

காமதேனு ஒருமுறை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடப் பிரியம் கொண்டது. காம தேனுவாயிற்றே, எதைக்கொண்டு அபிஷேகம் செய்யும் தனது பாலாலும், பாலில் கட்டி நின்ற நெய்யாலும் அபிஷேகம் செய்தது. இத்தலத்து ஈசுவரர் பசு நெய்யில் ஆடிய அப்பர் என்பதால் அவர் நெய்யாடியப்பர் என்றழைக்கப்படுகிறார்.

பாலுக்குள் நெய்யாக விளங்கும் இறைவனை விளங்க வைக்கவே, பாலையும் நெய்யையும் காமதேனு அபிஷேகம் செய்தது. நெய்யாடியப்பரை நெஞ்சாரப் பணிகிறோம். நெய்யாய் வெண்ணெயாய் திரண்டு வா திருவோனே என்று தாள் பணிகிறோம்.

காமதேனு மட்டுமல்ல... சரஸ்வதியும், கெவுசிக முனிவரும்கூட இவரை வழிபட்டுள்ளனர். இன்றும் நெய்யாடியப்பருக்குப் பசு நெய் அபிஷேகம் மிகவும் உகந்தது.
நெஞ்சு தொடர்பான நோய்கள் உள்ளவர்களும், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வந்து நெய் அபிஷேகம் செய்தால், நோய் பாதிப்பு விலகும் அல்லது குறையும் என்று உள்ளூர் அர்ச்சகர் தெரிவித்தார்.

அவர் சொல்வது உண்மை என்பதை விளக்குவது போல் நம் கண்ணெதிரிலேயே அபிஷேகம் செய்யவும், முன்னரே அபிஷேகம் செய்து பலன் கண்டதால் நேர்த்தியைப் பூர்த்தி செய்பவர்களுமாக நிறையப் பைர் வந்து சென்றதை காண முடிந்தது.
Tags:    

Similar News