ஆன்மிகம்
சூரிய பகவான்

உத்திரம் நட்சத்திர பரிகாரம்

Published On 2019-08-15 05:53 GMT   |   Update On 2019-08-15 05:53 GMT
சூரியனின் அருளாற்றல் நிறைந்த உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் மிகுதியாக பிற செய்யவேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம்.
சூரியனுக்குரிய நட்சத்திரங்களில் ஒன்று தான் உத்திர நட்சத்திரமாகும். அத்தகைய சூரியனின் அருளாற்றல் நிறைந்த உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் மிகுதியாக பிற செய்யவேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சூரிய பகவானுக்குரிய சூரியனார் கோயிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

உங்கள் வாழ்வில் தற்போது இருக்கின்ற பொருளாதார நிலை மேன்மேலும் பெருகுவதற்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று லட்சுமிக்கு துளசி மாலை மற்றும் தாமரைப்பூ சமர்ப்பித்து வழிபடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை வருகின்ற பிரதோஷ தினத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் பால் மற்றும் தேன் அபிஷேகம் செய்து வழிபடுவதாலும் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற துரதிர்ஷ்டங்கள் நீங்கி யோகங்களும், அதிர்ஷ்டங்களும் அதிகம் உண்டாகும்.

தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் சூரிய பகவானை நோக்கி கரங்களை கூப்பி “ஓம் சூரிய தேவாய நமஹ” என்ற மந்திரத்தை 10 முறை துதித்து உங்கள் அன்றாட செயல்களில் ஈடுபடுவது ஏற்றமிகு பலன்களை தரும். வயதில் மூத்தவர்களை மதித்து அவர்களின் பாதங்களை தொட்டு ஆசீர்வாதம் பெறுவது சூரிய பகவானின் அருள் உங்களுக்கு முழுவதும் கிடைக்க செய்யும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்குரிய தல விருட்சமாக இலந்தை பழ மரம் இருக்கிறது. இலந்தை பழ மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சென்று இலந்தை மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபாடு செய்வதாலும் வாழ்வில் மிக அதிகமான யோகங்களை தரக்கூடிய ஒரு அற்புத பரிகாரமாக இருக்கிறது.
Tags:    

Similar News