ஆன்மிகம்
சனி பகவான்

வேதனைகளைத் தரும் சனியை எப்படி சாந்தப்படுத்தலாம்?

Published On 2019-08-10 04:14 GMT   |   Update On 2019-08-10 04:14 GMT
வேதனைகளைத் தரும் சனியை சாந்தப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை முறையாக செய்து வந்தால் வாழ்க்கையை ஜெயிப்பதற்கு சனி பகவான் அருள் தருகிறார்.
• திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூரில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோவில் போன்ற சனியின் திருத்தலங்களுக்குச் சென்று சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யலாம்.

• ஏழரைச்சனி முடியும்வரை சனிக்கிழமை இரவில் படுக்கும் போது கைப்பிடி அளவு சனியின் தானியமான எள்ளை தலைக்கு கீழே வைத்து உறங்கி, காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து சனியின் வாகனமான காகத்திற்கு அன்னமிடலாம்.

• சனியை திருப்திப்படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம். காலில்லாதவர்களுக்கு ஊன்றுகோல் தானம் தருவது நல்ல பரிகாரம்.

• சைவர்கள் சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். (எள் தீபம் கூடாது. எள்ளை எரிப்பது தோஷம். எரிக்கக் கூடாது)

• வைணவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.

• பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.

ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள்தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி. அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன்பின் வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனி தருகிறார்.
Tags:    

Similar News