ஆன்மிகம்

நோய்கள் விரைவில் குணமாக பரிகாரம்

Published On 2019-06-07 08:40 GMT   |   Update On 2019-06-07 08:40 GMT
உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்கான மருந்துகளை உட்கொள்வதோடு இறை வழிபாடு செய்வது உடலிலும், மனதிலும் நேர்மறையான அதிர்வுகளை உண்டாக்கி சீக்கிரம் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
நோய்கள் வந்த பிறகு அதற்கான மருந்துகளை உட்கொள்வதை விட, நோய்களே ஏற்படாமல் தடுத்துக் கொள்வதே சிறந்த வழிமுறையாகும். உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்கான மருந்துகளை உட்கொள்வதோடு இறை வழிபாடு செய்வது உடலிலும், மனதிலும் நேர்மறையான அதிர்வுகளை உண்டாக்கி சீக்கிரம் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இஷ்ட தெய்வம் இருப்பது எதார்த்தமான ஒன்று தான். தினமும் காலையில் எழுந்ததும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால், உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். மேலும் பூஜை அறையில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வத்தின் படம் அல்லது சிறிய அளவிலான விக்கிரகத்திற்கு மலை நெல்லிக்காயை நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் அந்த மலை நெல்லிக்காயை தெய்வ பிரசாதமாக சாப்பிட்டு வரவேண்டும்.

நெல்லிக்காய் என்பது இயற்கையிலேயே ஒரு மருத்துவ குணம் மிக்க ஒரு காய் மட்டும் கனி வகையாக இருக்கிறது. ஆன்மிக ரீதியாகப் பார்க்கும் போதே இந்த நெல்லிக்காய் லட்சுமி தேவிக்குரிய ஒரு நைவேத்திய பொருளாக இருக்கிறது. எனவே தினமும் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு மலை நெல்லிக்காயை நைவேத்தியம் செய்து வழிபட்ட பிறகு, அந்த நெல்லிக்காயை தெய்வ பிரசாதமாக சாப்பிட்டு வருவதால் உங்கள் இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைத்து, உங்களின் நோய்கள் சீக்கிரம் குணமடைகிறது. லட்சுமிதேவியின் அருள் ஆசிகளும் உங்களுக்கு கிடைக்கிறது.
Tags:    

Similar News