ஆன்மிகம்

கடன் தொல்லை நீக்கும் எளிய பரிகாரங்கள்

Published On 2017-10-26 14:52 IST   |   Update On 2017-10-26 14:52:00 IST
கடன் பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
1. தோலால் ஆன செருப்பு, பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும்.

2. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.

3. முதல் நாள் நீரில் ஊற வைத்த முழு பயத்தம் பருப்பை மறுநாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.

4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.

5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.

6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்.

Similar News