ஆன்மிகம்

வேப்பமரம் நட்டால் குழந்தை பாக்கியம்

Published On 2017-08-23 02:49 GMT   |   Update On 2017-08-23 02:49 GMT
நாக தோஷத்தால் (சர்ப்ப தோஷம்) திருமண தடை, மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும். சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5--ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸ்தானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.

இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.
Tags:    

Similar News