ஆன்மிகம்

நாக தோஷம் போக்கும் நாகேஸ்வரம்

Published On 2017-07-22 06:04 GMT   |   Update On 2017-07-22 06:04 GMT
கால சர்ப்பதோஷம், ராகுதிசை, ராகுபுத்தி, நாக தோஷம் உள்ளவர்கள் திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகு பகவானைத் வழிபட்டால் அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
ராகுபகவானிற்கு உரிய சிறப்பு ஸ்தலம் திருநாகேஸ்வரம். இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் (கும்பகோணம்- காரைக்கால் சாலையில்) உள்ளது.

கால சர்ப்பதோஷம், ராகுதிசை, ராகுபுத்தி, நாக தோஷம் போன்றவற்றிற்கு உட்பட்டவர்கள் இங்குள்ள ராகு பகவானைத் துதித்து வழிபட்டால் அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். ஐந்து தலை அரவமாகிய (நாக ராஜாவாக) ராகுபகவான் சன்னிதி, கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ளது. உதட்டோர புன்னகை, மடித்த காலில் இடது கரத்தை ஊன்றி வலக்கரத்தால் அருள் பாலிக்கிறார்.

இங்கு வீற்றிருக்கும் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும் பால், அவருடைய திரு மேனியில் பட்டு வழியும் போது நீலநிறமாக மாறிவிடும் அதிசயம் இன்றுவரை நடந்து வருகிறது.

1980-ம் ஆண்டு ராகு பகவானின் மீது கிடந்த நாகப் பாம்பின் சட்டை, கோவிலில் கண்ணாடி பேழை ஒன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News