ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் மணிகர்ணிகை தீர்த்தம்

Published On 2017-07-17 08:17 GMT   |   Update On 2017-07-17 08:17 GMT
நாகப்பட்டினம் வேதாரண்யேசுவரர் கோவிலுக்குள் உள்ள மணி கர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் பிரம்மஹத்தி போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் வேதாரண்யம் உள்ளது. இங்கு வேதாரண்யேசுவரர் கோவில் உள்ளது. சிவபெருமான் அகத்திய முனிவருக்கு திருமணக்காட்சி காட்டிய திருத்தலம்.

தேவார பாடல் பெற்ற இக்கோவிலுக்குள் உள்ள மணி கர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள் தங்கள் பாவங்களை கழுவி கொள்வதுடன், மூதாதையர்கள் செய்த பாவங்களுக்கும் நிவர்த்தி பெற்று வரலாம். பிரம்மஹத்தி தோஷம், ஒரு உயிரைக்கொன்றால் ஏற்படும்.

இங்கு நீராடினால் பிரம்மஹத்தி போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலுக்கு எதிரே உள்ள கடல், ‘ஆதி சேது’ என அழைக்கப்படுகிறது. இங்கு நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடுவதை விட சிறந்ததாகும். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசைகளில் இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் நீராடுவர்.
Tags:    

Similar News