ஆன்மிகம்

நாக தோஷம்: நாக சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்ற தலங்கள்

Published On 2017-06-29 07:39 GMT   |   Update On 2017-06-29 07:39 GMT
நாக தோஷத்தை போக்க நாக சிலையை பிரதிஷ்டை செய்யலாம். தோஷமுள்ளவர்கள் கீழுள்ள ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் நாகப்பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும்.
ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12-வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும். இந்த தோஷத்தை போக்க நாக சிலையை பிரதிஷ்டை செய்யலாம்.

நாகப்பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும், பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

ஆகவே தோஷமுள்ளவர்கள் கீழுள்ள ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் நாகப்பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர்.
ராமநாதர்-ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), முத்தால பரமேஸ்வரியம்மன் -பரமக்குடி (ராமநாதபுரம்), மகுடேஸ்வரர்-கொடுமுடி (ஈரோடு), அனந்தீஷ்வரர்-சிதம்பரம் (கடலூர்), முத்துக்குமரர் -பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகராஜா சுவாமி -நாகர்கோவில் (கன்னியாகுமரி),குமரக்கோட்ட முருகன்- காஞ்சீபுரம் (காஞ்சீபுரம்).



பச்சைவண்ணப் பெருமாள் -காஞ்சீபுரம் (காஞ்சீபுரம்), பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்-அமிர்தபுரி (காஞ்சீபுரம்), ஆதிகேசவப்பெருமாள் -ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சீபுரம்), நஞ்சுண்டேஸ்வரர்- காரமடை(கோவை), திருவேட்டீஸ்வரர்-திருவல்லிக்கேணி (சென்னை),தேனுபுரீஸ்வரர் -மாடம்பாக்கம் (சென்னை), ரவீஸ்வரர் -வியாசர்பாடி (சென்னை).

அருணஜடேசுவரர்-திருப்பனந்தாள் (தஞ்சாவூர்), சுப்பிரமணிய சுவாமி -குமாரவயலூர் (திருச்சி),தொண்டர்கள் நயினார்சுவாமி -திருநெல்வேலி (திருநெல்வேலி), பக்தவச்சலப்பெருமாள்-திருநின்றவூர் (திருவள்ளூர்), சாமாண்டியம்மன்-சாமாண்டிபுரம், கம்பம் (தேனி), விருப்பாச்சி ஆறுமுகநயினார்-தீர்த்ததொட்டி (தேனி).
சிவலோகநாதர்-திருப்புன்கூர் (நாகப்பட்டினம்), நாகநாத சுவாமி -நாகநாதர் சன்னதி (நாகப்பட்டி னம்),அர்த்தநாரீஸ்வரர் -திருச்செங்கோடு (நாமக்கல்), அரங்குளநாதர் -திருவரங் குளம்(புதுக்கோட்டை), கல்யாணராமர்-மீமிசல் (புதுக்கோட்டை).

காசிவிஸ்வநாதர்-இரும்பாடி சோழவந்தான் (மதுரை), அய்யனார் சுவாமி -கோச்சடை (மதுரை), செல்லத் தம்மன்,கண்ணகி -சிம்மக்கல்(மதுரை), அங்காள ஈசுவரி-மாந்தோப்பு (விருதுநகர்), நாகேஸ்வரசுவாமி -பூவரசன்குப்பம் (விழுப்புரம்).
Tags:    

Similar News