ஆன்மிகம்

நவகோள்களின் நன்மைகளை பெற்றுத்தரும் நவரத்தினங்கள்

Published On 2017-05-04 05:00 GMT   |   Update On 2017-05-04 05:00 GMT
நவரத்தினம் அணிவது உடல் நலத்தையும், செல்வச்செழிப்பையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் கொடுக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.
நகை அணிவது அழகிற்காக என்பது உண்மைதான். ஆனால் அழகுடன் ஆரோக்கியமும் கிடைக்கும் என்றால் நகை அணிவதை கூடுதல் பலன் என்றே சொல்ல வேண்டும். நவரத்தினங்கள் பார்க்க வண்ணமயமாய் இருப்பதுடன் அதிகப்பலன்களையும் கொடுக்கக்கூடியதாக இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. பொதுராக நவரத்தினத்தை மோதிரங்களாக அணிவது தான் வழக்கம் என்றாலும் பென்டன்ட், நெக்லஸ், கம்மல் மற்றும் வளையல்களிலும் இது எடுப்பாகவே இருக்கும்.

நவரத்தினம் அணிவது உடல் நலத்தையும், செல்வச்செழிப்பையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் கொடுக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.



நவரத்தினமும் நலகோள்களும் :

சிவப்பு நிற மாணிக்கக்கல் சூரியனையும், முத்து சந்திரனையும், பவளம் செவ்வாயையயும், பச்சை புதனையும், புஷ்பராகம் குருவையும், வைரம் சுக்கிரனையும், நீலம் சனியையும், கோமேதகம் ராகுவையும், வைடூரியம் கேதுவையும் குறிக்கிறது. மேற்கூறிய நவகோள்களிலிருந்து வரும் காந்த அலையின் ஆற்றல்கள் நம் உடலில் இரத்த ஓட்டத்திலும், தசைகளிலும், நரம்புகளிலும், எலும்பு மஜ்ஜையிலும், விந்து நாதத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.

அவரவரின் பிறந்த நேரம் மற்றும் காலத்திற்கேற்ப அந்தந்த ஆற்றல்கள் நல்லதாகவோ கெடுதலாகவோ பயன்களைத் தரக்கூடியது. அவரவரின் தசாபுத்திகளுக்கு ஏற்ப இந்த பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். நல்ல தரமான ஜாதிக்கற்களாக, குறிப்பிட்ட அளவுகளிம் எடையிலும் பார்த்து அணியும் போது அது, அந்த கோள்களின் அலைகளின் தாக்கத்தை சமன் செய்து அணிபவருக்கு நன்மையை அளிக்கிறது. மேலும் இந்த கற்கள் நன்மையளிக்கக் கூடிய வகையில் உள்ள கிரகங்களின் கதிர்வீச்சை மாற்றி அமைப்பதாக கூறப்படுகிறது.



நவரத்தின நகைகளை அணியும் முறை :

நவரத்தின நகையை, அது மோதிரமாக இருந்தாலும் மற்ற நகையாக இருந்தாலும் வெள்ளி அல்லது தங்கத்தில் மட்டுமே பதித்து அணிவது நல்லது. நவரத்தின நகையை எப்படி அணிய வேண்டும் என்பதை கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோஷம் எதுவுமில்லாத கற்களாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். நகையை மஞ்சள் சேர்ந்த நீரில் நன்கு கழுவி, துடைத்து பூஜையறையில் வைத்து நவரத்தின மந்திரங்களால் ஜபித்து வணங்க வேண்டும்.

பின்பு அதிகாலை நேரத்திலோ அல்லது நல்ல நேரமாக பார்த்தோ அல்லது கோயிலிலோ நகையை அணிந்து கொள்ள வேண்டும். நவரத்தின மோதிரம் அணியும் போது நீலக்கல், கையை தொங்க விடும்போது உடலின் அருகில் இருக்குமாறு அணிய வேண்டும். பெண்கள் இடது கையின் மோதிர விரலிலும், ஆண்கள் வலது கையின் மோதிர விலலிலும், ஆண்கள் வலது கையின் மோதிர விரலிலும் மோதிரத்தை அணிய வேண்டும்.
Tags:    

Similar News