ஆன்மிகம்

பஞ்ச உபச்சாரமும் கிரக தோஷ நிவர்த்தியும்

Published On 2017-02-20 04:21 GMT   |   Update On 2017-02-20 04:21 GMT
கிரகதோஷம்தான் என்றில்லை. கிரக திசை நடந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை கடைபிடிக்க நற்பலன்கள் கிட்டும் என வேதம் கூறுகிறது.
1) சூரியன், செவ்வாய் திசை நடப்பவர்கள் கோவிலில் தீபம் ஏற்றலாம் (அல்லது) மெழுகுவர்த்தி ஏறலாம். இஃது எளிமையான கிரக தோஷம் போக்கும் வழியாகும். இயன்றவர்கள் தீபம் தானம் கொடுக்கவும்.

2) சந்திரன், சுக்கிரன் திசை நடப்பவர்கள் அபிஷேகத்திற்கு பால் கொடுக்கலாம். விளக்கிற்கு நெய் கொடுக்கலாம். ஓடுகின்ற நீரில் (ஆற்றில்) பால் விடலாம். ஜலம் (நீர்) எடுத்து கொடுக்கலாம். சுக்கிர, சந்திர கிரக தோஷம் நீங்கும்.

3) புதன் கிரக தோஷம் நீங்க சந்தனம் (ஒரிஜினல்) ஆலயத்திற்கு அளிக்கலாம். (அல்லது) சந்தன அலங்காரம் செய்து மகிழலாம் (அல்லது) சந்தனத்தை நெற்றியில் தினம் தரித்து வரலாம். பூஜையில் சந்தன ஊதுபத்தி ஏற்றலாம். இது புதன் கிரக தோஷம் நீக்கும் எளிய வழியாகும்.

4) குரு கிரக தோஷம் நீங்க ஆலய வழிபாட்டிற்கு செல்லும்போது, மலர் மாலை (அல்லது) புஷ்பம் (பூ) சுவாமிக்கு அளிக்கலாம்.

5) சனி, கிரக தோஷம் நீங்க ஆடை, தூபம், அணிமணிகளை தெய்வத்திற்கு அளிக்கலாம். இராகு, கேதுவிற்கு சொந்த வீடு இல்லாதபடியால் அது நின்ற வீட்டு அதிபதியை பிரதிபலிக்கும் என அறியவும். உதாரணமாக ரிஷப ராசியில் ராகுவும், விருச்சிக ராசியில் கேதுவும் நின்றால், ராகு சுக்கிரனையும், செவ்வாயை கேதுவும் பிரதிபலிக்கும்.

கிரகதோஷம்தான் என்றில்லை. கிரக திசை நடந்தாலும் மேல் கண்ட எளிய பரிகாரங்களை கடைபிடிக்க நற்பலன்கள் கிட்டும் என வேதம் கூறுகிறது.

Similar News