ஆன்மிகம்

ராகு பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலம்

Published On 2017-01-30 05:24 GMT   |   Update On 2017-01-30 05:24 GMT
ராகு பாதிப்பு உள்ளவர்கள், ராகு திசை அல்லது புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கு குன்றத்தூரில் இருக்கும் திருநாகேஸ்வரர் கோவிலில் விசேஷ வழிபாடுகள் செய்யப்படுகிறது.
பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலமான, குன்றத்தூரில் இருக்கும் திருநாகேஸ்வரர் கோவில் ராகு பரிகாரத் தலமாக விளங்குகிறது. ராகுவால் வழிபடப்பட்டதால் இத்தலத்து ஈஸ்வரருக்கு ‘திருநாகேஸ்வரர்’ என்பது பெயராகும். இந்த ஆலயத்தில் ராகுவுக்குரிய வழிபாடுகள் விசேஷமாக செய்யப்படுகிறது. அம்பிகைக்கு காமாட்சி என்று பெயர். மூலவருக்கு வழங்கப்பட்ட பழைய பெயர் ‘சடையாண்டீஸ்வரர்’ என்பதாகும்.

ராகு பாதிப்பு உள்ளவர்கள், ராகு திசை அல்லது புத்தி நடப்பில் இருப்பவர்கள், இத்தலத்து சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபடுவது வழக்கம். சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப சாபம் போன்றவற்றால், திருமணத்தடை மற்றும் ஆயுள் பாதிப்பு உண்டாகலாம். அதற்கு ராகு கால வழிபாடு செய்வது அவசியம். சர்ப்ப சாந்தி பரிகாரமாக ஹோமமும் செய்து நல்ல பலன்களை பெறலாம்.

Similar News