ஆன்மிகம்

சூரிய தோஷ பரிகாரத்திற்கான சிறந்த தலம்

Published On 2017-01-23 03:44 GMT   |   Update On 2017-01-23 03:44 GMT
சூரிய தோஷ பரிகாரத்திற்கான சிறந்த தலமாக சென்னை போரூருக்கு அருகில் உள்ள கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
சென்னை, வண்டலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.

இந்த அகத்தீஸ்வரர் ஆலயம், சூரிய பரிகார தலமாக விளங்குகிறது. 1,300 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இத்தலத்தின் இறைவன் அகத்தீஸ்வரர். அவருக்கு வாகீச மகாதேவர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. தெற்கு நோக்கி அருளும் அம்பிகையின் கருவறை கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், துர்க்கை, பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இங்கே தனி சன்னிதியில் சூரிய பகவான் ஈஸ்வரனை நோக்கிய வண்ணம் விசேஷமாக உள்ளார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரியபகவானுக்கு சிவப்பு நிற உடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மேலும் சூரியனுக்குரிய தானியமான கோதுமையை, அவர் காலடிகளில் வைத்து மனமுருக வேண்டினால் சூரிய தோஷங்கள் நீங்குகின்றன. சூரிய பகவான் இத்தல மூலவரை வழிபட்டதால் சூரிய பரிகார தலமாக விளங்கி வருகிறது.

Similar News