ஆன்மிகம்

கேதுவுக்குரிய சிறந்த பரிகார தலம்

Published On 2017-01-19 03:49 GMT   |   Update On 2017-01-19 03:49 GMT
கேது தோஷம், நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார தலம் ஒன்று சென்னையில் உள்ளது. இந்த தலத்தை பற்றியும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
போரூர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் ஆலயம், கேதுவுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இதனை வட கீழ்பெரும்பள்ளம் என்றும் அழைக்கிறார்கள். மூலவர் பெயர் நீலகண்டேஸ்வரர். அம்பிகையின் பெயர் ஆதி காமாட்சி. ஜாதக ரீதியாக உள்ள நாகதோஷத்தை போக்கக்கூடிய சக்தி வாய்ந்த தலமாக இது கருதப்படுகிறது. இத்தலத்தில் கேது பகவானை தனிச் சன்னிதியில் தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் பழைய பெயர், ‘அழகிய சோழ நல்லூர்’ என்பதாகும். கேதுவால் வழிபடப்பட்ட பெருமை கொண்ட ஆலயம் என்பதால், அவரால் ஏற்படும் தோஷங்கள் இங்கு நிவர்த்தியாகின்றன.

ஒவ்வொரு நாளும் வரக்கூடிய எமகண்ட வேளை என்பது கேதுவிற்கு உரியதாகும். இங்கே செய்யப்படும் எமகண்ட வேளை பூஜைகள் விசேஷமானது. நீலகண்டேஸ்வரருக்கும், நந்திக்கும் இடையே இருக்கும் மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போன்ற ஒரு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழாக நின்றபடி நீலகண்டேஸ்வரரையும், அம்பிகையையும் பிரார்த்தனை செய்தால் கேது தோஷம் நீங்கும்.

Similar News