ஆன்மிகம்

சென்னையில் செவ்வாய் தோஷத்திற்கு பரிகார தலம்

Published On 2017-01-18 04:48 GMT   |   Update On 2017-01-18 04:49 GMT
சென்னைக்கு தெற்கே இருக்கும் பூந்தமல்லியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரகத்திற்கு பரிகார தலமாக கருதப்படுகிறது.
சென்னைக்கு தெற்கே இருக்கும் பூந்தமல்லியில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயம்தான் செவ்வாய் பரிகார தலமாக கருதப்படுகிறது.

காரணம் செவ்வாயும், தேவர்களின் அதிபதியான இந்திரனும் இத்தலத்தில் உள்ள வைத்தீஸ்வர சுவாமியை வணங்கி, தங்களது சிரமங்கள் நீங்க பெற்றிருக்கின்றனர். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சோழர் களால் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

இக்கோவிலின் மூலவர் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்பிகையின் பெயர் தையல் நாயகி அம்மன். நவக்கிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய்க்குரிய தலமாக இத்தலம் விளங்குகிறது.

செவ்வாய்க்கிழமை அன்று வரும் ராகுகால நேரத்தில் இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கும், விஷ்ணு துர்கைக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் மூலம் செவ்வாய் பரிகாரமும், தீராத நோய்கள், பகை மற்றும் தோல் நோய்கள் நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை நிலவுகிறது.

Similar News