ஆன்மிகம்

புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-04-20 09:55 IST   |   Update On 2017-04-20 09:55:00 IST
நாகர்கோவில் புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் குடும்ப விழாவாக கொண்டாடப்படுகிறது.

நாளை மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலையும், 6 மணிக்கு திருக்கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆரோக்கிய ஆன்றோ மறையுரையாற்றுகிறார். தினமும் மாலை செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. 23-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் பெஞ்சமின் திருப்பலிக்கு தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜெரி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார்.

காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை நற்கருணை ஆராதனையும், 4 மணிக்கு நற்கருணை ஆசீரும், 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜான் குழந்தை மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது.



29-ந்தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் மரிய அல்போன்ஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

30-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலிக்கு அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர், 5.30 மணிக்கு பொதுக்கூட்டம், 6.30 மணிக்கு நடனப்போட்டி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணிப்பேரவை, பங்குத்தந்தை ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Similar News