ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

வாழ்வுக்கு தேவை மன அடக்கம்

Published On 2022-04-26 04:17 GMT   |   Update On 2022-04-26 04:17 GMT
இன்றைய சூழலில் நினைப்பவை அனைத்தையும் பேசி விட வேண்டும், நினைப்பவை அனைத்தையும் அடைந்து விட வேண்டும் என்ற சூழலில் பல தவறுகள் தொடர்ந்து நடைபெறுவது இயல்பான ஒன்றாக மாறி போய் நிற்கிறது.
‘தூய்மையானவற்றை தூய்மையாய் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர். தூய்மையானவற்றை கற்றுக்கொண்டோர் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்’ (சீ.ஞா.6:10)

‘மன அடக்கம்’ என்ற வார்த்தையை கேட்டவுடன் பலரும் அது சன்னியாசிகளுக்கும், ஞானிகளுக்கும் சம்மந்தம் உடையது, தங்களுக்கு சம்பந்தம் இல்லாதது என்று நினைக்கிறார்கள். சன்னியாசிகள் துறவு மேற்கொள்வதால் மன அடக்கத்தின் அளவு மிக மிக அதிகம் தேவைப்படும் அவ்வளவுதான். ஆனால் மன அடக்கம் ஏதோ தத்துவம் பேசுகிறவர்களை சார்ந்தது என ஒதுக்கப்பட்ட விஷயமல்ல. அன்றாட வாழ்வுக்கு மன அடக்கம் மிக அவசியம்.

இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மனப்பக்குவத்தை சோதிக்கும் சவால்களும், சோதனைகளும் நிறையவே உண்டு. பல மனிதர்களோடு பழகுவதும், தொடர்பு கொள்வதும் மனிதர்களுக்கு தவிர்க்க முடியாதவை. மேலும் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கஷ்டங்களும், பிரச்சினைகளும் வருகிறது. மன அடக்கம் இருந்தால் சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியும். பொறுமையும், சகிப்புத் தன்மையும் மன அடக்கத்தால் தான் கிடைக்கும். மன அடக்கம் உள்ளவர்கள்தான் வாய் அடக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். யோசிக்காமல் பேசுவதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு உறவு பிளவு படுகிறது. சமுதாயத்தில் தவறுகள் நடப்பதற்கு தனி மனித மன அடக்கம் பற்றிய விழிப்புணர்வு பெறாமல் இருப்பது ஒரு காரணம் ஆகும். மனிதன் தன் மனம் போன போக்கில் செயல்படுவதால் பல நேரங்களில் குழப்பத்திற்கு உள்ளாகிறான். மன அடக்கம் இல்லாதவர்கள் நிம்மதியை இழந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே நமது வெற்றிக்கு தேவை மன அடக்கம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

இன்றைய சூழலில் நினைப்பவை அனைத்தையும் பேசி விட வேண்டும், நினைப்பவை அனைத்தையும் அடைந்து விட வேண்டும் என்ற சூழலில் பல தவறுகள் தொடர்ந்து நடைபெறுவது இயல்பான ஒன்றாக மாறி போய் நிற்கிறது. எனவே நாமும் அடக்க உணர்வோடு பல நல்லதை செய்ய இந்த நன்னாளில் கற்றுக் கொள்வோம்.

-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News