ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனித வெள்ளி

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி மும்மணி தியான ஆராதனை

Update: 2022-04-15 03:47 GMT
உயிரை விடுவதற்கு முன்பாக சிலுவையில் ரத்தம் சிந்தியவாறு அவர் கூறும் வார்த்தைகள் பற்றி இன்று சிறப்பு வழிபாடாக நடைபெறுவது வழக்கம்.
இயேசு 40 நாட்கள் வனாந்தரத்தில் உபவாசம் இருந்து ஜெபித்த நாட்களைதான் தபசு காலம், வசந்தகாலம் என்று திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது.

இயேசு தனது சீடர்களுடன் இந்த நாளில் இரவு விருந்து அருந்துவார். இதுவே அவரது கடைசி இரவு உணவாகும். சிலுவையில் அடித்து கொல்லப்படுவதற்கு முந்தைய நாளான இன்று 12 சீடர்களின் கால்களை கழுவுவார். நான் கழுவுவது போல ஏழைகளின் கால்களை கழுவ வேண்டும் என்று கூறினார். அந்த நாளை நினைவு கூறும் வகையில் பெரிய வியாழன் நேற்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இந்த ஆராதனையில் கிறிஸ்தவர்கள் மிகுந்த பய பக்தியுடன் இவ்வாராதனையில் பங்கேற்று சாக்கிரமந்தை (அப்பம், திராட்சை ரசம்) பெற்றார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று பெரிய வெள்ளி எனப்படும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. ஏசுவை கொல்கொதா மலைக்கு இழுத்து சென்று அங்கு சிலுவையில் அவரை ஆணிகளால் அடித்தும், தலையில் முள் கிரீடம் சூட்டியும் பிதாவின் சித்தத்தின்படி உயிரை மாய்க்கும் முன் 7 வார்த்தைகளை சிலுவையில் ஏசு கூறுவார். அந்த 7 வார்த்தைகள் பற்றி ஆலயங்களில் போதனை நடைபெறும்.

உயிரை விடுவதற்கு முன்பாக சிலுவையில் ரத்தம் சிந்தியவாறு அவர் கூறும் வார்த்தைகள் பற்றி இன்று சிறப்பு வழிபாடாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆராதனை 3 மணி நேரம் தியாணிக்க கூடிய வகையில் நடைபெறுவதால் இதற்கு மும்மணி தியான ஆராதனை என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள்.

கத்தோலிக்க திருச்சபைகளிலும், தென்னிந்திய திருச்சபைகளிலும், லுத்தரன், மெத்தடிஸ்ட், பெந்தே கோஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரிவு கிறிஸ்தவ அமைப்புகளிலும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

அந்த நாளில் உபவாசம் இருந்து வழிபாடுகளில் பலர் பங்கேற்பார்கள். அதனை தொடர்ந்து பெரிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
Tags:    

Similar News