ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வேளாங்கண்ணி

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்

Published On 2022-04-13 04:18 GMT   |   Update On 2022-04-13 04:18 GMT
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்று இருப்பதும், வங்க கடலோரம் அமைந்து இருப்பதும் வேளாங்கண்ணி பேராலயத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

.ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

தவக்காலம் தொடங்கும் நாள் ‘சாம்பல் புதன்' ஆகும். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். வருகிற 17- ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி வேளாங்கண்ணிக்கு மாதா பேராலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
Tags:    

Similar News