ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

போதும் என்ற மனமே வாழ்வுக்கு தேவை

Published On 2022-04-07 07:13 GMT   |   Update On 2022-04-07 07:13 GMT
உணவு, உடை, நேரம், பொழுது போக்கு, பயணம் போன்றவற்றை கவனத்தோடு தேவைக்கு மட்டும் நாம் பயன்படுத்தி கொள்வது நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்யும்.
எவரிடமும் நாங்கள் இலவசமாக உணவருந்தவில்லை. மாறாக உங்களுள் எவருக்கும் சுவையாய் இராதபடி, இராப்பபலாய் பாடுபட்டு உழைத்தோம்(2 தெச3:8)

மனநிறைவு என்பது ஆசையற்ற மனநிலையை குறிப்பதாகும். இருப்பதை கொண்டு நிறைவோடு வாழ்கின்ற வாழ்க்கை தான் மனநிறைவு. தேவையற்ற ஆசைகளை ஒரு மனிதன் அறவே விலக்கி விட வேண்டும். கடினப்பட்டு உழைக்க வேண்டும். சிலவற்றை செய்வதற்கு நாம் ஆசைப்பட வேண்டும். அதே நேரத்தில் அளவுக்கு மீறி ஆசைப்படுவது நமது சுயகட்டுப்பாட்டை நாம் இழப்பதற்கு வழிவகுக்கும். புத்தர் சொல்வது போன்று ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. மனநிறைவு என்ற பண்பு நாம் நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்கிறது.

சீனாவை சேர்ந்த ஞானி ஒருவருக்கு மோட்சத்தையும், நரகத்தையும் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நரகத்தில் ஆண்களும், பெண்களும் சோகமாக இருந்தார்கள். விண்ணுலகில் வாழ்ந்த மனிதர்களோ மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் அங்கு எதுவுமே இல்லை. இந்த நிகழ்வில் இருந்து அவர் சொல்கின்ற செய்தி என்னவென்றால் ஒரு மனிதன் நிறைவோடு வாழ்கின்ற பொழுது அவன் விண்ணுலகில் வாழ்கின்றான். மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்க்காமல் வாழ்கின்ற வாழ்க்கை தான் மேன்மையான வாழ்க்கை ஆகும்.

உணவு, உடை, நேரம், பொழுது போக்கு, பயணம் போன்றவற்றை கவனத்தோடு தேவைக்கு மட்டும் நாம் பயன்படுத்தி கொள்வது நிறைவோடு வாழ்வதற்கு உதவி செய்யும். அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். எளிய வாழ்க்கை வாழ்வதற்கு எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். இன்றைய கால சூழலில் வெளிநாட்டு பொருட்களுக்கு ஆசைப்படுகின்ற சூழல் மிக அதிகமாக காணப்படுகிறது. மேலை நாட்டு பொருட்களை விட இருக்கின்றதில் நிறைவோடு வாழ்கின்ற ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த நாளில் முயற்சி செய்வோம்.

-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News