ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

தண்ணீர் சேமிப்பு வாழ்வின் சேமிப்பு

Published On 2022-03-29 06:54 GMT   |   Update On 2022-03-29 06:54 GMT
நாம் நமது குழந்தைகளுக்கு தண்ணீரின் அவசியத்தை குழந்தை பருவத்திலேயே சொல்லி கொடுக்க வேண்டும். அது பல வாழ்வின் பயிற்சியை அவர்கள் கற்று கொள்ள உதவியாக இருக்கும்.
நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி(1 பேதுரு 1:25)

இன்று விரும்புவது போன்று எதையும் செய்யும் நிலை வாழ்கின்ற வாழ்க்கை முறை நிலவி வருகிறது. அளவுக்கு அதிகமாக பொருட்களை உபயோகப்படுத்துவது இன்றைய குழந்தைகளிடம் மிக அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் சேமிப்பு நமக்கு மிக முக்கியம். குறிப்பாக தண்ணீரை சேமிப்பது மிக மிக முக்கியம். இரண்டாவது நாம் அடுத்த தலைமுறைக்கு பரிசாக கொடுக்க வேண்டியது தண்ணீர் தான்.

சிவராமலிங்கம் என்ற 75 வயதுடைய மனிதர் 39 ஆண்டுகள் இங்கிலாந்து ராயல் விமானப்படையில் விஞ்ஞானி அதிகாரியாக பணியாற்றியவர். தற்போது சென்னை பெசன்ட் நகரில் உள்ள கடற்கரை சாலையில் வசித்து வருகிறார். தண்ணீரை சேமிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு மனிதர் இவர். சாலையோரம் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார். அதற்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கிறார். எப்படி என்றால் சமையல் மற்றும் குளியல் அறையில் இருந்து வெளியேறுகின்ற நீரை மட்டும் மறுசுழற்சி செய்து அதை சேமித்து மரம் செடி கொடி குழாய் மூலம் ஊற்றி வருகிறார்.

தண்ணீரை சேமிப்பது குறித்த கருத்தரங்கை பிற நாடுகளுக்கு சென்று செய்து வருகிறார். நாம் தினமும் 750 மில்லியன் லிட்டர் தண்ணீரை செலவழிக்கிறோம். இது கழிவு நீராய் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரில் 80 சதவீதம் தண்ணீர் குளிப்பது, சமையலுக்கு பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 20 சதவீதம் தண்ணீரில் 15 சதவீதம் கழிவறைக்கு சென்று விடுகிறது.

அன்றாடம் ஒரு நபர் குடிப்பதற்கு 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நாம் நமது குழந்தைகளுக்கு தண்ணீரின் அவசியத்தை குழந்தை பருவத்திலேயே சொல்லி கொடுக்க வேண்டும். அது பல வாழ்வின் பயிற்சியை அவர்கள் கற்று கொள்ள உதவியாக இருக்கும். எனவே முடிந்த அளவு தண்ணீரை சேமிப்பதன் மகத்துவத்தை நமது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து குழந்தைகளை நாம் முறையான பாதையில் வளர்ப்பதற்கு முயற்சி செய்வோம்.

- அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News