ஆன்மிகம்
இயேசு

இயேசு ஏன் காயப்பட வேண்டும்?

Published On 2020-05-30 09:13 IST   |   Update On 2020-05-30 09:13:00 IST
மனிதனின் பாவத்தின் நிமித்தமே இயேசு காயப்பட்டார். நமக்கு சமாதானத்தையும் விடுதலையும் பெற்று தரும்படியே இயேசு காயப்பட வேண்டியதாகி இருந்தது.
இன்றைய தவக்கால சிந்தனையின் தலைப்பாக இயேசு ஏன் காயப்பட வேண்டும் என்று இருப்பதை சற்று சிந்திப்போம். ஏசாயா 53:5-ம் வசனம் இப்படி சொல்கிறது. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். இந்த வேத வசனம் மிக நன்றாக நமக்கு விளக்கி காட்டுகிறது. நம்முடைய மீறுதல்களினிமித்தம் என்று.

மனிதன் கடவுளுக்கு பயந்து உண்மையாக வாழ வேண்டும் என்று இறைவன் பல கட்டளைகளை வேதாகமத்தின் மூலம் அவன் நல்வாழ்விற்கு தந்தார். அது அவனை அவன் சேர்ந்த சமூகத்திற்கு நல்லவைகளான பல நற்காரியங்களை செய்வதற்கும் அவன் நல்லவனாக வாழ்வதற்குமான அடிப்படையாக அமைந்தது. அந்த கட்டளைகளை அவனை மீறச்செய்தது. முதன் முதலில் உண்டாக்கப்பட்ட ஆதி மனிதனின் துணையாகிய ஏவாள் மீறுகிறாள் பின் ஆதாமும் மீறுகிறான். அன்று ஆரம்பித்தது இன்று வரை மனிதன் மீறுதல் செய்கிறவனாகவே வாழ்கிறான்.

உதாரணமாக ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் இருந்தும் பலர் அதை அணியாமல் வாகனம் ஓட்டவது போல, துணிந்து சட்டத்தை மீறுவது. தேவன் கொடுத்த நல்ல கட்டளைகளை கடைபிடிக்காமல் மனிதன் பாவம் செய்ய பழகி விட்டான். நியாய பிரமாணத்தை மீறுவதே பாவம் என்று வேதம் சொல்கிறது. இப்படி மனிதனின் பாவத்தின் நிமித்தமே இயேசு காயப்பட்டார். நமக்கு சமாதானத்தையும் விடுதலையும் பெற்று தரும்படியே இயேசு காயப்பட வேண்டியதாகி இருந்தது. அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம் என்று வேதம் சொல்கிறது போல இந்த தவக்காலத்தில் இயேசுவின் கட்டளைகளை பின்பற்றி நல்வழியில் நடப்போம்.

- சகோதரி. ரூத்,

சமாதான ஐக்கிய ஜெப ஊழியங்கள், திருப்பூர்.

Similar News