ஆன்மிகம்
இயேசு

சுய கட்டுப்பாடு வேண்டும்

Published On 2020-04-22 04:17 GMT   |   Update On 2020-04-22 04:17 GMT
ஆன்மாவின் நலனுக்குப் பயன்படாத நம்முடைய சுய மகிழ்வகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்கி ஆன்ம வளர்ச்சிக்கான பண்புகளை வளர்த்துக்கொள்ள முயற்சி எடுப்போம்.
குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்து கொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு: உறுதியாக இரு: துன்ப வேளைகளில் பதற்றமுடன் செயலாற்றாதே. ஆண்டவரை இறுகப் பிடித்துக்கொள்: அவரை விட்டு விலகிச் செல்லாதே.. என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்: இழிவு வரும் போது பொறுமையாய் இரு.. ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்: அவர் உனக்கு துணை செய்வார். உன் விழிகளைச் சீர்படுத்து.. நெறி பிறழாதீர்கள்: பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள். ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்களுக்கு கைமாறு கிடைக்காமற் போகாது.

(சீஞா.2:1-8) ஒறுத்தல் இறைவன் விரும்பும் நற்பண்பாகும். இவ்வொறுத்தல் இறைவன் மீது கொண்ட அன்பினால், விருப்பத்தினால், அவரோடு இணைய வேண்டும் என்ற தாக்கத்தினால் செய்யப்பட வேண்டும். திருச்சபை எவரையும் உடனடியாக புனிதர் நிலைக்கு உயர்த்துவதில்லை. அவர்களின் நீண்ட ஒறுத்தல் நிலைகளை கண்டபிறகே உயர்த்தும். அதுபோல சுய கட்டுப்பாடுகளுடன் நாமும் ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதையும் கடமைக்காகவோ, கட்டாயத்திற்காகவோ செய்யக்கூடாது. மாறாகக் கடவுளின் உன்னத அன்பிற்காகவே செய்யப்பட வேண்டும். அதுவும் பிறர் நல மனப்பான்மையோடு செய்ய வேண்டும்.

“பறவைகள் எப்பக்கம் பறந்து சென்றாலும் அங்கெல்லாம் ஆகாயம் இருப்பதைக் காண்பது போல நாம் எங்கு சென்றாலும் கடவுள் முன்னிலையில் இருக்கிறோம்” என்கிறார் புனித பிரான்ஸிஸ் சலேசியார். ஆகவே ஆன்மாவின் நலனுக்குப் பயன்படாத நம்முடைய சுய மகிழ்வகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்கி ஆன்ம வளர்ச்சிக்கான பண்புகளை வளர்த்துக்கொள்ள முயற்சி எடுப்போம்.

-அருட்தந்தை அல்போன்ஸ், பூண்டி
Tags:    

Similar News