ஆன்மிகம்
பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்த போது எடுத்த படம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2019-12-25 03:35 GMT   |   Update On 2019-12-25 03:35 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் நேற்று நள்ளிரவு கத்தோலிக்க மறைமாவட்ட புதிய பி‌‌ஷப் அந்தோணி சாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் குருமட அதிபர் டெரன்ஸ், பங்கு தந்தை ராஜே‌‌ஷ் மற்றும் இறை மக்கள் கலந்து கொண்டனர். இரவு 12 மணிக்கு வானில் இருந்து நட்சத்திரங்கள் இறங்கி வருவது போல், அங்கு ஏசு கிறிஸ்து பிறந்திருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு சென்று அனைவரும் ஏசு கிறிஸ்துவை வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் கேக் வெட்டி கிறிஸ்து பிறப்பை கொண்டாடினர். இதேபோல் இலந்தைகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குதந்தை அந்தோணி குரூஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுதவிர உடையார்பட்டி திருஇருதய ஆண்டவர் ஆலயம், டவுன் அடைக்கல மாதா ஆலயம், சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயம், சேவியர் காலனி அந்தோணியார் ஆலயம் மற்றும் நெல்லை பகுதிகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சி.எஸ்.ஐ. சார்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களில் அதிகாலையில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.
Tags:    

Similar News