ஆன்மிகம்
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கேக் வெட்டப்பட்டதை படத்தில் காணலாம்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

Published On 2019-12-21 03:02 GMT   |   Update On 2019-12-21 03:02 GMT
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

இந்த ஆலயத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக வழக்கத்தை காட்டிலும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

வருகிற 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் இந்த பேராலயத்தில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

விழாவை வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கேக் வெட்டப்பட்டது. இதையடுத்து ஏசு பிறப்பின் நிகழ்வுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும், பாடல்கள், நாடகம் மூலம் எடுத்து கூறப்பட்டது.

இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள், வேளாங்கண்ணி பேராலய ஊழியர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News