ஆன்மிகம்
இரு தங்க தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இரு தங்க தேர்பவனி

Published On 2019-12-16 03:59 GMT   |   Update On 2019-12-16 03:59 GMT
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இரு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளாக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை, ஆராதனை ஆகியவை நடந்தது.

9-ம் நாள் திருவிழாவன்று காலை நோயாளிகளுக்கான திருப்பலி, இரவு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனி ஆகியவை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் கடைசி நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு தங்க தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 9 மணிக்கு சூசையப்பர் மற்றும் மாதா இரு தங்க தேர் பவனி ஆகியவை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிரும், இரவு 8 மணிக்கு நாடகமும் நடைபெற்றது.
Tags:    

Similar News