ஆன்மிகம்
இயேசு

உழைப்பு வாழ்வின் முகவரியாகட்டும்

Published On 2019-11-30 03:51 GMT   |   Update On 2019-11-30 03:51 GMT
வீழ்ச்சி, தடுமாற்றம் போன்றவை ஏற்பட்டவுடன் சோர்ந்திடாது முன்னோக்கிய பயணத்தை இன்னும் விரைவுப்படுத்திட வேண்டும்.
உயர்வடைய வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துவிட்டால் எந்த சூழ்நிலையிலும் அஞ்சாது மிக துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். வறுமை மிகுந்த குடும்பத்தில் பிறந்தவரே பெர்னாட்ஷா. எவ்வித பின்புலமும் இல்லை. தனது வருமானத்தை நம்பியே குடும்பம் இயங்குகிறது என்பதனை உணர்ந்தார். ஒரு அலுவலத்தில் சாதாரண ஊழியராக வேலைக்கு சேர்ந்தார். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் முடியவில்லை. குடும்ப பின்புலம், அநத் வேலையிலேயே தொடர வேண்டிய நிலை ஏற்படுகிறது. மனதை குழப்பி கொண்டார். வேலையை விட்டுவிட தீர்மானம் எடுத்தார். வேலையை ராஜினாமா செய்து விட்டு தன் தாய்க்கு கடிதம் எழுதுகிறார். அம்மா கடவுள் கொடுத்தது ஒரு வாழ்க்கை. அதையும் ஆபீஸ் பையனாக வீணாக்க விரும்பவில்லை.

தொடர்ந்து பல முயற்சிகள் எடுக்கிறார். எழுத்தாளராக புதிய அவதாரம் எடுக்கிறார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவரை தேடி வருகிறது. இருப்பதில் நிறைவு கொள்வதல்ல வாழ்க்கை. தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் வாழ்வில் வெற்றியினை எளிதாக வசப்படுத்த இயலும். அவமானம், இடையூறு போன்றவற்றை கடந்து செல்கிறவர்களே வெற்றியாளர் ஆவர்.

இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் இறைவனின் அருளை நிரம்ப பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் நாம் கடினப்பட்டு உழைத்திட வேண்டும். இறைப்பணியை செய்வதற்கு அழைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்களுமே, உழைப்பை மிகவும் போற்றினர்.

இன்றைய நாளில் நாம் என்னென்ன பயிகளை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பதை நன்கு திட்டமிட வேண்டும். வீழ்ச்சி, தடுமாற்றம் போன்றவை ஏற்பட்டவுடன் சோர்ந்திடாது முன்னோக்கிய பயணத்தை இன்னும் விரைவுப்படுத்திட வேண்டும். அதனால் இன்றே செய்வோம் என்ற மனநிலையோடு இயங்க வேண்டும். அப்போது நமது வாழ்வின் இலக்குகள் பலருக்கும் பயன்தரும. உழைப்பு, நமது வாழ்வின் முகவரியாகட்டும்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News