ஆன்மிகம்
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை விழா

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை விழா

Published On 2019-11-19 03:54 GMT   |   Update On 2019-11-19 03:54 GMT
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை விழா தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை விழா தொடங்கியது. புனித செபஸ்தியார் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு பவனியாக ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது. 32-வது நாளான டிசம்பர் 18-ந் தேதி பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா தென்மேற்கு மண்டலம் சார்பில் தொடங்குகிறது. 19-ந் தேதி வடக்கு மண்டலம் சார்பிலும், 20-ந் தேதி கிழக்கு மண்டலம் சார்பிலும், 21-ந் தேதி குதிரைப்பந்திவிளை மண்டலம், 22-ந் தேதி பண்டாரக்காடு மண்டலம் சார்பிலும், 23-ந் தேதி பொது பட்டாபிஷேகமாகவும் கொண்டாடப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு மண்டலத்தினரும் தங்கள் பகுதிக்கான தேரை பல வாரம் இரவு- பகலாக வடிவமைப்பார்கள். அலங்கரிக்கப்பட்ட தேர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்கு கொண்டு வந்து அர்ச்சிக்கப்படும். பின்னர் திருப்பலி நடைபெறும். அதனைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தேர் அந்தந்த பகுதிகளுக்கு ஊர்வலமாக புறப்படும்.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை ஷிஜின், தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, குதிரைப்பந்திவிளை, பண்டாரக்காடு ஆகிய 5 மண்டலங்களை சேர்ந்த பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News