ஆன்மிகம்
இயேசு

மனவலிமையையும், பக்குவத்தையும் பெற

Published On 2019-11-14 03:53 GMT   |   Update On 2019-11-14 03:53 GMT
மனவலிமையோ, பக்குவமோ, நம்மிடம் போதுமான அளவு இல்லை. என்ன செய்வது நம்மால் அது இயலாது என்பதை உணர்ந்து கடவுளுடைய கிருபையால் அதனை தினமும் அடைய முன்வரவேண்டும்.
“எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பது போல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல. எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. (2 கொரிந்தியர் 3:5)

தினமும் இரண்டு முறை ஒரு உதாணரமான மலையின் மேல் ஏறி இறங்க வேண்டும். ஒரு பெரிய சுமையை தலையில் வைத்துக்கொண்டு ஒரு ஆலயத்தை தினமும் 7 முறை சுற்றி வர வேண்டும். மாதந்தோறும் ஒரு பெருந்தொயையை கோவிலில் காணிக்கையாக கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றினால் தான் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார். இவ்விதமாக கிறிஸ்து நமக்கு சொல்லியிருந்தால் உண்மையாகவே சிரமப்பட்டாகிலும் இவைகளை நிறைவேற்றி தேவனுடைய ஆசிர்வாதங்களை பெற நாம் தீவிரமாக முன்வருவோம். ஆனால் கிறிஸ்து இந்தவிதமாக எதையும் நமக்கு சொல்லவில்லை.

கிறிஸ்துவோ பிறரை நேசிச்ச வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். சாந்தமாக வாழ வேண்டும் என்பது போன்ற கட்டளைகளையே நிறைவேற்ற நமக்கு சொன்னார். முன்னர் சொன்னவைகளை நம்முடை உடல் வலிமையினால் எப்படியாவது செய்து விடலாம். ஆனால் பின்னர் சொல்லப்பட்டவைகளை சுயபலம், உடல் பல வைராக்கியம் ஆகியவற்றால் நிறைவேற்ற மனவலிமையும், பக்குவம் அவசியம். அநேகர் சரீரநிலையில் தங்களை ஒடுக்கி சிரமப்படுத்திக்கொள்வதையே அதிகபக்தியின் அடையாளமாக எண்ணுவதுண்டு.

இந்த நாட்களில் மிஷினரி ஸ்தாபனங்களுக்காக வாரிவழங்குவோர் அநேகர் உண்டு. சொந்த செலவில் மணிக்கூண்டுகளையும், தேவாலயங்களையும் கட்டிக்கொடுப்போர் உண்டு. பெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்து புகழ்பெற்ற போதகர்களை பேச வைக்கின்றவர்கள் உண்டு. ஆயினும் இவ்விதம் தாராளமாக செயல்படுகின்ற பலரிடம் ஒரு சில சாதாரண கிறிஸ்தவ குணங்களும், பண்புகளும் கூட இருப்பதில்லை. ஒரு நல்ல விசுவாச வாழ்க்கையும், ஜெப வாழ்க்கையும் அவர்களுக்கு கூடாத காரியம். ஆனால் இது கடவுளை பிரியப்படுத்தாத வாழ்க்கை. பரலோகத்தில் யார் எவ்வளவு கிறிஸ்துவத்திற்காக பாடுபட்டார்கள் என்பது அல்ல. யார் கிறிஸ்துவின் வழியில் நடக்க முயற்சித்தார்கள் என்பதே பார்க்கப்படும். ஆனால் கடவுள் நம்முடைய இதய நிலையில் நாம் சிரமத்தை ஏற்பதையும் கடவுளின் விருப்பத்திற்கு இசைந்து வாழும் கடினமான பாதையை தெரிந்து கொள்ளுவதையே விரும்புகின்றார்.

அந்த மனவலிமையோ, பக்குவமோ, நம்மிடம் போதுமான அளவு இல்லை. என்ன செய்வது நம்மால் அது இயலாது என்பதை உணர்ந்து கடவுளுடைய கிருபையால் அதனை தினமும் அடைய முன்வரவேண்டும். சுயபலம், வைராக்கியம் ஆகியவைகளை சாராமல் தினமும் தேவனுடைய கிருபையின் மேல் சாய்ந்து ஜெபம், தியானம், ஐக்கியம் ஆகிய அனுபவங்கள் மூலம் அந்த மனவலிமையையும், பக்குவத்தையும் பெறவேண்டும். அப்போது கடவுளுடைய கட்டளைகள் எளிதாக நிறைவேறும். ஆசீர்வாதங்களும் பெருகும்.

“இறைவனை பயத்துடன் வழிபடுகிறவனாக அல்ல.
அன்புடன் அவர் வழியில் நடக்கிறவனாக இரு. அதுவே பக்தி”

சாம்சன்பால்.
Tags:    

Similar News