ஆன்மிகம்
கிறிஸ்து அரசர்

நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் 15-ந்தேதி திருவிழா

Published On 2019-11-13 03:08 GMT   |   Update On 2019-11-13 03:08 GMT
நாகர்கோவில், கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா 15-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

விழாவில் 15-ந் தேதி மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் செபமாலை, திருப்பலி, புகழ்மாலை நடைபெறுகிறது.

17-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலிக்கு பேரருட்பணி அமிர்தராஜ், பெர்பெச்சுவல் ஆன்றனி, செல்வின் சேவியர், ஸ்டாலின் ஆகியோர் தலைமை தாங்கி மறையுரையாற்றுகின்றனர். 20-ந் தேதி குழித்துறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

23-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலிக்கு அருட்பணி ஜெரேமியாஸ் தலைமையில், மார்க்கோணி மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. பேரருட்பணி அலோசியஸ் பென்சிகர் தலைமையில், லியோன் கென்சன் மறையுரையாற்றுகிறார். சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெறுகிறது.

24-ந் தேதி காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலிக்கு பேரருட்பணி கில்லாரியுஸ் தலைமையில், ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு ஆங்கில திருப்பலி, 11 மணிக்கு மலையாள திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி ராபர்ட் தலைமையில், அனில் மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றித்திருப்பலி அதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News