ஆன்மிகம்
மிக்கேல்

நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா

Published On 2019-09-19 05:52 GMT   |   Update On 2019-09-19 05:52 GMT
நாகர்கோவில்,வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில், வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

நாளை மாலை 6.30 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு அருட்பணி ஜோசப் தலைமை தாங்குகிறார். இரவு 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணி தேவதாஸ் தலைமையில் எவாஞ்சலின் எம்.பெஸ்கி மறையுரையாற்றுகிறார்.

மேலும் விழா நாட்களில் செபமாலை, திருப்பலி, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், நற்கருணை ஆராதனை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறுகிறது. விழாவில் 21-ந் தேதி அருட்பணி அருள் தலைமையில் சார்லஸ் மறையுரையாற்றுகிறார்.

22-ந்தேதி காலை 7 மணிக்கு அருட்பணி மைக்கல் ஏஞ்சலுஸ் தலைமையில் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். 23-ந் தேதி அருட்பணி சேவியர் ராஜா தலைமையில் அந்தோணியப்பன் மறையுரையாற்றுகிறார்.

28-ந் தேதி அருட்பணி ஜோசப் ராஜ் தலைமையில் பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆராதனையில், அருட்பணி கிளாரியுஸ் தலைமையில் ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

29-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, அருட்பணி ஜாண்சன் தலைமையில் கபிரியேல் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு சிறுசேமிப்பு ஆண்டுவிழா மற்றும் பரிசு வழங்குதல் நடைபெறுகிறது.
Tags:    

Similar News