ஆன்மிகம்
மற்றவர்களின் துன்பத்தை கண்டு கண்ணீர் வடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த துன்பத்தை துடைக்க தானே ஒரு கருவியாக மாறவேண்டும். இதுதான் ஏசு விரும்பும் மரச்சிலுவை.
சிங்கம் என சீறி வாரீர்! புயல் என புறப்பட்டு வாரீர்! அலை கடலென திரண்டு வாரீர்! இமயமாய் எழுந்து வாரீர்! என்று ஆங்காங்கே குரல் ஒலிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்டவர் ஏசு சத்தமில்லாமல் “சிலுவையை சுமந்து வாரீர்“ என்று தவக்கால அழைப்பு விடுக்கிறார். எப்படிப்பட்ட சிலுவையை நாம் சுமக்க அழைக்கப்படுகிறோம் என்பதை நாம் சிந்திப்போம்.
அடுத்த வேளை உண்ண உணவு இல்லை என்ற போதும் தன்னிடம் இருந்த நெல் விதையை எடுத்துக் கொண்டு விதைக்க செல்லுகின்ற விவசாயிக்கு அன்றாட “உணவு” ஓர் சிலுவை. மீன் பிடித்து எப்படியும் மீள முடியும் என்று இரவு நேரத்தில் கடலை நோக்கி பயணம் செய்யும் மீனவர்களுக்கு தன் “வாழ்வு” ஒரு சிலுவை. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இருந்தும் இரவில் உறக்கம் வராமல் படுத்து புரளும் பணக்காரர்களுக்கு “இரவு” ஓர் சிலுவை.
ஆயிரம், லட்சம் என்று பணம் சேர்த்தும் தன் பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்று தவிக்கும் பெற்றோர் களுக்கு பிள்ளைகளின் “எதிர்காலம்” ஓர் சிலுவை. புதுமண தம்பதிகளுக்கு “வயதான பெற்றோர்கள்” ஓர் சிலுவை. அறிவியல் மேதைகளுக்கு இன்று “ஆன்மிகவாதிகள்” ஓர் சிலுவை. உனக்கு நான் சிலுவை. எனக்கு நீ சிலுவை என்று, இன்று நாம் சிலுவைக்கு அர்த்தம் கொடுத்து வருகிறோம். இதுவா ஏசு நம்மை சுமந்து கொண்டு தன்னை பின் தொடரச் சொன்ன சிலுவை? இல்லை, இல்லவே இல்லை.
உண்மையை உறக்கத்தில் வைத்துவிட்டு, அநீதியால் அக்கிரம ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்களிடம், உண்மை எடுத்துரைப்பதும், அதற்காக சாட்சிய வாழ்வு வாழ்வதுமே உண்மையான சிலுவை ஆகும். இப்படி வாழ்கின்ற போது நமக்கு தோல்வி என்பது நிரந்தரம் ஆகலாம். இன்பம் என்பது இல்லாமல் போகலாம். துன்பம் மட்டுமே துணையாகலாம். சொத்துக்கள் பறிபோகலாம். சொந்த பந்தங்கள் விலகி போகலாம், இழப்பு ஏற்படலாம். ஏன் இறப்பும் ஏற்படலாம். இத்தகைய சிலுவைகளை தான் ஏற்றுக் கொண்டு ஏசுவை பின்தொடர வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார். இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தான் ஏசுவும் வாழ்ந்து காட்டினார்.
மற்றவர்களின் துன்பத்தை கண்டு கண்ணீர் வடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த துன்பத்தை துடைக்க தானே ஒரு கருவியாக மாறவேண்டும். இதுதான் ஏசு விரும்பும் மரச்சிலுவை. ஏழை மக்களின் நலனுக்காக அரசிடமும், அவர்களை அடிமைப்படுத்தி வாழும் பணக்கார முதலைகளிடம் போராட வேண்டும். கொத்தடிமை, லஞ்சம், ஊழல், வரதட்சணை, குழந்தை தொழிலாளர்கள் போன்றவைகளை அன்றாட வாழ்வில் பார்த்து, ஐயோ பாவம் என்று நினைத்துவிடாமல், அதை எதிர்த்து போர்க்கொடி தூக்கவும் நாம் முயலுகின்ற போது ஏசுவைப் போல் நாமும் சிலுவையை சுமக்க முடியும். இதைத்தான் ஏசு சுமக்க அழைக்கிறார்.
எனவே துன்பம் என்றதும் துவண்டு போகின்ற நிலையிலிருந்து விலகி, சிலுவை என்றதும் சினுங்குகிற மனதினை மாற்றி, பிறருக்காக படும் வேதனைகளை துன்பங்களை நம் தோளில் வைத்துக் கொண்டு, கல்வாரி நோக்கி வீர நடைபோடுவோம். எத்தனையோ மரத்தை கொண்டு சிலுவைகைளை செய்த நாம் எத்தனையோ மனிதர்கள் இருந்தும் ஒரு ஏசுவை உருவாக்க முடியவில்லையே? ஏசு சொன்ன சிலுவையை சுமந்து நாளைய வரலாற்றை உருவாக்கி நமது பெயரை வாழ்த்த செய்வோம்.
- அருட்தந்தை. ஆரோக்கியதாஸ், முத்துப்பிள்ளை மண்டபம் கும்பகோணம்.