ஆன்மிகம்

யெகோவா என்பது ஒரு கூட்டுப் பெயர்

Published On 2016-10-01 11:33 IST   |   Update On 2016-10-01 11:33:00 IST
பழைய ஏற்பாட்டில் இந்த “யெகோவா” என்ற பெயர் கூட்டுப் பெயராகவே வருகிறது.
பிதாவாகிய தேவனுக்குள்ள சகல தன்மைகளும் குமாரனாகிய தேவனுக்கும் இருக்கின்றன. பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவரே பரிசுத்தாவி என்பதை வசனங்களே தெளிவாய் போதிக்கின்றன.

“யெகோவா” - என்ற எபிரேய வார்த்தையை “கர்த்தர்” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருள் “இருக்கிறவராகவே இருக்கின்றவர்” என்பதாகும். பழைய ஏற்பாட்டில் இந்த “யெகோவா” என்ற பெயர் கூட்டுப் பெயராகவே வருகிறது. கூட்டுப் பெயர் என்றால் தேவனின் மூன்று ஆளத்துவங்களும் அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி என இணைந்தே சொல்லபடுவது - “யெகோவா”.

பழைய ஏற்பாட்டில் கூட்டுப் பெயராகவே வருகின்ற யெகோவாவின் நாமங்கள், பெயர்கள்:

1. யெகோவா ரஃபா - உன்னை குணமாக்குகிற கர்த்தர் (யாத்திராகமம்: 15:26)

2. யெகோவா நிசி - கர்த்தரே நமது வெற்றி அல்லது கொடி (யாத்திராகமம்: 17:8-15)

3. யெகோவா ஷாலோம் - கர்த்தர் நமது சமாதானம் (நியாயாதிபதிகள்: 6:24)

4. யெகோவா ரா - கர்த்தர் நமது மேய்ப்பர் - (சங்கீதம்: 23:1-4)

5. யெகோவா சிட்க்கனு - கர்த்தர் நமது நீதியாயிருக்கிறார் (எரேமியா: 23:6)

6. யெகோவாயீரே - கர்த்தர் த‌ேவைகளை பூர்த்தி செய்கிறவர் (ஆதியாகமம்: 22:14)

7. யெகோவா ஷம்மா - கர்த்தர் அங்க‌ே இருக்கிறார் (எரேமியா : 48:35)

8. ஏல்-எலியோன் - கர்த்தர் உன்னதமானவர் (ஆதியாகமம்: 14:18-20

9. எல்-ஷடாய் - கர்த்தர் போதுமானவர் ; சர்வ வல்லவர் (ஆதியாகமம்: 17:1 ; யாத்திராகமம்: 6:3)

10. எல்-ஓலம் - சதாகாலமும் உள்ள தேவன் (ஆதியாகமம்: 21:33)

11. அடோனாய் - எஜமான் (யாத்திராகமம்: 23:17) கர்த்தராகிய ஆண்டவர்.

12. ஏலோகிம் - “ஏல்” என்ற வார்த‌்தையின் பன்மை இது. “தேவன்” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

வ‌ேதத்தில் கர்த்தரின் தன்மைகள் பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. அத்தனை பெயர்களும் கூட்டுப் பெயர்களே.

Similar News