ஆன்மிகம்

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா நாளை தொடக்கம்

Published On 2016-09-01 08:26 IST   |   Update On 2016-09-01 08:26:00 IST
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலய 326-வது ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சென்னை முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

நவ நாட்களாக நாளை முதல் 10-ந் தேதி வரை காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி, சிறப்பு மறையுரை, தேவ நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அருட்தந்தையர்கள் இருதயசாமி, அந்தோணிசாமி, ஸ்டேன்லி அலெக்ஸ் ஆகியோர் சிறப்பு மறையுரை வழங்குகின்றனர்.

ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11-ந் தேதி காலை சிறப்பு திருப்பலிகளும், புதுவை- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. 12-ந் தேதி காலை திருப்பலிக்குப்பின் கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பெருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தை தாமஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News