ஆன்மிகம்

கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் எசேக்கியா

Published On 2016-08-15 09:58 IST   |   Update On 2016-08-15 09:58:00 IST
கடவுள் நமக்காக வைத்திருக்கும் திட்டத்தை மீறி நாம் நம்முடைய விருப்பத்துக்காய் கடவுளை இறைஞ்சி மன்றாடும் போது கடவுள் ஒருவேளை அவற்றைத் தருவார். ஆனால் அது ஆசீர்வாதங்களுக்குப் பதிலாக பெரும் சாபத்தைக் கொண்டு வரும் வாய்ப்பும் உண்டு என்பதை எசேக்கியாவின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.
எசேக்கியா யூதாவின் அரசனாக முடிசூட்டிக் கொண்டபோது அவருக்கு வயது 25. தாவீது மன்னனைப் போல கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் எசேக்கியா. நாட்டு மக்கள் வேற்று தெய்வங்களையும் சிலைகளையும் வழிபட்டு வந்தனர். மோசே அடையாளத்துக்காய் செய்து வைத்திருந்த வெண்கலப் பாம்பைக் கூட தூபம் காட்டி வழிபட்டு வந்தனர். எசேக்கியா அத்தனை சிலைகளையும் உடைத்து தூண்களைத் தகர்த்து நாட்டை தூய்மையாக்கினார்.

மீண்டும் உண்மைக் கடவுளை வழிபடும் கூட்டம் அதிகரித்தது. மக்கள் கடவுளை உண்மையுடனும் ஆத்மார்த்தமாகவும் தொழ ஆரம்பித்தனர். காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த தயக்கம் காட்டவில்லை. எசேக்கியா மன்னன் யூதா நாடு முழுவதும் இந்த மத சீர்திருத்தத்தைச் செய்தார். எசேக்கிய மன்னனுக்கு எதிராக அசீரிய மன்னன் செனகெரிபு எழுந்தான். அவன் ஏற்கனவே இஸ்ரவேலின் பத்து கோத்திர நகரங்களை கைப்பற்றியிருந்தான். இப்போது அவன் எசேக்கியாவுக்கு எதிராக போரிட வந்தான்.

எசேக்கிய மன்னன் போரைத் தவிர்க்க விரும்பி சிரிய மன்னனுக்கு அளவில்லாத செல்வத்தை அள்ளி வழங்கினான். ஆண்டவரின் இல்லத்தில் இருந்தவற்றை எல்லாம் கூடமன்னனுக்குக் கொடுத்தான். அவனுடைய கர்வம் தீரவில்லை. எந்தக் கடவுளும் என்னோடு போரிட்டு வெற்றி பெறமுடியாது. எல்லா கடவுள்களையும் விடநானே வலிமையானவன் என கர்வம் கொண்டு எசேக்கிய மன்னனை ஏளனம் செய்தான். எசேக்கிய மன்னன் கடவுளின் ஆலயத்துக்குச் சென்று அவரது பாதத்தில் சரணடைந்தார்.

ஆடைகளைக் கிழித்து தன்னைப் பணிவானவனாக்கினான். கடவுள் மனமிரங்கினார். தன்னை இழிவாய்ப் பேசிய மன்னனுடைய படை வீரர்கள் ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேரை கடவுளின் தூதர் அன்று இரவே கொன்றார். எசேக்கியேலுக்குப் போர் தேவைப்படவில்லை. சிரிய மன்னனோ நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். தனது கடவுளான நிஸ்ரோக்கின் ஆலயத்தில் சென்று வழிபாடு செய்தான். அப்போது அவனுடைய மகன்களில் இருவர் வந்து அவரை வெட்டிக் கொன்றனர்!

காலங்கள் கடந்தன. எசேக்கியா மன்னனுக்கு நோய் வந்தது. படுத்த படுக்கையானான். இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து. நீர் இறந்து போய் விடுவீர் என்பது கடவுளின் வாக்கு என்று சொன்னார். எசேக்கியேல் பதறினார். ஆண்டவரே உம் பார்வையில் நல்லவனாய் வாழ்ந்தேனே எனக்கு நோயை தீர்த்து ஆயுளை நீட்டித்துத் தாரும் என கதறி அழுது வேண்டினார். கடவுள் மனமிரங்கினார். மீண்டும் எசாயா வழியாக எசேக்கியேலிடம் பேசினார்.

கடவுளின் வாக்கு எனக்கு வந்தது. நீர் இன்னும் 15 ஆண்டுகள் வாழ்வீர். இன்றிலிருந்து மூன்றாவது நாளில் கடவுளின் இல்லம் செல்வீர் என்று மன்னனிடம் தெரிவித்தார் எசாயா. அதற்கு என்ன அடையாளம்? எசேக்கியா கேட்டார். நீயே சொல். உனது நிழல் பத்து பாகை முன்னால் போகவேண்டுமா பத்து பாகை பின்னால் வரவேண்டுமா? எசாயா கேட்டார். நிழல் முன்னால் போவது எளிது. பத்து பாகை பின்னால் வரட்டும் எசேக்கியா சொன்னார். எசாயா கடவுளிடம் வேண்டினார். நிழல் பத்து பாகை பின்னால் வந்தது. எசேக்கியா மகிழ்ந்தார். அவருடைய நோய் நீங்கியது. வாழ்க்கை தொடர்ந்தது.

உமக்குப் பின் உம்முடைய மகன்கள் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப்படுவார்கள் என்றார் எசாயா. எசேக்கியேல் அதைக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. தனது வாழ்நாளில் நாடு நன்றாய் அமைதியாய் இருந்தால் போதும் என்றே அவர் நினைத்தார். எசேக்கியாவின் வாழ்க்கை முடிந்தது. அவனுக்குப் பின் அவனுடைய மகன் மனாசே அரசரானார்.

மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. கடவுளுக்கு எதிரான ஒரு வாழ்க்கையை அவன் வாழ்ந்தான். நாடு மீண்டும் மிகமிக மோசமான நிலைக்குச் சென்றது. அவனுக்குப் பின் வந்த அவனது மகன் ஆமோனும் கடவுள் வெறுக்கத்தக்க கெட்ட ஆட்சியையே நடத்தினான்.எசேக்கியா ஒருவேளை பதினைந்து ஆண்டுகள் அதிகமாய் வாழவேண்டும் எனஆசைப்படாமல் இருந்திருந்தால் மனாசே பிறந்திருக்கவே மாட்டான்.

மனாசேவின் ஐம்பத்து ஐந்து ஆண்டு கெட்ட ஆட்சி நடந்திருக்கவே நடந்திருக்காது. அவனுடைய மகன் ஆமோனும் பிறந்திருக்க மாட்டான். உணர்த்தியதும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டார் பவுல். இக்கூடாரம் பிரிக்கப்படும் நேரம் விரைவில் வரும் என்பது எனக்குத் தெரியும்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அதை எனக்குத் தெரிவித்துள்ளார் என்று மனப்பூர்வமாய் ஒத்து கொண்டார். ஆனால் எசேக்கியா அப்படிச் செய்யவில்லை. கடவுள் நமக்காக வைத்திருக்கும் திட்டத்தை மீறி நாம் நம்முடைய விருப்பத்துக்காய் கடவுளை இறைஞ்சி மன்றாடும் போது கடவுள் ஒருவேளை அவற்றைத் தருவார். ஆனால் அது ஆசீர்வாதங்களுக்குப் பதிலாக பெரும் சாபத்தைக் கொண்டு வரும் வாய்ப்பும் உண்டு என்பதை எசேக்கியாவின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.

Similar News