ஆன்மிகம்

தூய அலங்கார அன்னை ஆலய தேர்பவனி 14-ந்தேதி நடக்கிறது

Published On 2016-08-12 08:25 IST   |   Update On 2016-08-12 08:25:00 IST
கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர்பவனி 14-ந்தேதி நடக்கிறது.
கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி புதியதாக 6 லட்சம் மதிப்பில் 60 அடி உயரமுள்ள 1 அடி சுற்றளவு கொண்ட பித்தளை கொடிமரம் செய்யப்பட்டு 6 அடி பீடத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ளது.

தூய அலங்கார அன்னை கொடியை கிறிஸ்தவ பேண்ட் இசைக்குழுவினர் ஊர்வலமாக எடுத்துக் கொண்டு காமராஜர் சாலையில் ரயில்நிலையம் முதல் மகாமகக்குளம் மணிக்கூண்டு வரை சென்று வந்தனர். புனித வேளாங்கண்ணி மாதா ஆலய அதிபர் பிரபாகர் கொடியேற்றி திருப்பலி செய்தார்.

பின்னர்மரியாள் இரக்கத்தின் அன்னை என்ற தலைப்பில் இறைமறை உறையாற்றினார். இதில் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவை, பங்கு மக்கள் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த ஏராளாமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற 13-ந்தேதி வரை திருப்பலியும் மற்றும் மரியாள் பற்றிய மறைஉரையும் நடைபெறுகிறது. ஆண்டு பெருவிழாவின் சிறப்பு அம்சமாக வருகிற 14-ம் தேதி தூய அலங்கார அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.

Similar News