ஆன்மிகம்

திருக்காவலூர் பெரியநாயகி மாதா

Published On 2016-07-07 11:04 IST   |   Update On 2016-07-07 11:04:00 IST
குழந்தை வரம் அருளும் திருக்காவலூர் பெரியநாயகி மாதா கோவிலை பற்றி அறிந்து கொள்ளுவோம்.
இக்கோயில் முதலில் மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் இருந்தது. 17 ம் நூற்றாண்டில் இத்தாலிய பாதிரியார் பெஸ்ஸி இரண்டு சுருபங்களை கொண்டுவந்தார்.அவர் தமிழ்நாடு முழுவதும் மத போதனையில் ஈடுபட்டார். கோணான்குப்பம் முதலில் ஏலகுருச்சி / திருக்காவலூர் என அழைக்கப்பட்டது. அவ்வாறு மத போதனையில் ஈடுபடும் போது ஏலகுருச்சி / திருக்காவலூர் காட்டு பகுதியில் ஒரு சுருபத்தை தவறவிட்டார்.
 
அப்பொழுது கோனான்குப்பத்தில் காசிராயர் என்பவர் இருந்தார், அவருக்கு குழந்தைப்பேறு கிடையாது. அதற்காக அன்னையிடம் வேண்டினார், அன்னையோ நான் இப்பொழுது காட்டில் தான் இருக்கிறேன், என்னை கண்டிபிடித்து ஒரு ஆலயம் எழுப்பு, உனக்கு குழந்தை பிறக்கும் என்றாள். உடனே அவர் காட்டில் இருந்த சுருபத்தை கண்டுபிடித்து,சிறு ஆலயத்தை எழுப்பினார். அவருக்கு குழந்தையும் பிறந்தது.
 
மக்கள் அனைவரும் வழிபட ஆரம்பித்தனர். இதை கேள்விப்பட்ட பாதிரியார் பெஸ்ஸி ஏலகுருச்சி / திருக்காவலூர் வந்து, தான் தவறவிட்ட சுருபத்தை கண்டு அளவில்லாத மகிழ்ச்சி அடைந்து அங்கேயே தங்கி பணிபுரிந்தார். ஏலகுருச்சி / திருக்காவலூர் என்ற பெயரை "கோணான்குப்பம்" என வழங்கினார். மேலும் தற்போதுள்ள ஆலயத்தை கட்டினார். 


 
இரக்கமும் கருணையும் நிறைந்த பெரியநாயகி தாயே! வீரமாமுனிவரால் பாடி புகழப்பட்டவளே! விண்மீன்களால் அலங்கரிக்கபட்டவளே! கோணான்குப்பதில் வீற்றிருக்கும் உம திருவடி நாடி தேடி நம்பிக்கையுடன்,விசுவாசத்துடன் வரும் உம அடியார்களிடம் உள்ள உடல் ஆன்ம தாகத்தையும், ஏக்கத்தையும்,தேவைகளையும் கடைக்கண் பார்த்து உதவி புரிபவளே!
 
உம் திருமைந்தன் யேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசுவீராக. நீவிர் பரிந்து பேசுவதால் இந்த ஆலயத்தில் இருக்கின்ற நோயாளிகள் எல்லாம் குணம் பெறுவார்களாக. எங்கள் ஒவ்வொருக்கும் உள்ள உடல்,ஆன்ம சுகம் கிடைப்பதாக. மகப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறும், நல்ல வரன் வேண்டிவருவர்களுக்கு நல்ல வாழ்கை துணையும் கிடைப்பதாக. எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், உண்மையான அன்பும் குடிகொள்வதாக.
 
படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், வறுமையில் வாழ்வோருக்கு நல்ல வாழ்வும், வேலையற்றோருக்கு நல்லவேளையும் கிடைப்பதாக. முதியவர்களையும்,பெற்றோர்களையும், குழந்தைகளையும் விண்ணக ஆசிரால் நிரப்புவீரக.
 

Similar News