ஆன்மிகம்

இயேசு சந்தித்த மூன்றாம் சோதனை: உலக அரசுகள் எல்லாம் உமதே

Published On 2016-06-09 12:10 IST   |   Update On 2016-06-09 12:10:00 IST
இயேசு சந்தித்த மூன்றாம் சோதனை என்னவென்று பார்க்கலாம்.
இறுதி சோதனையின் போது அலகை இயேசுவை “மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,” தன்னை வணங்கச் சொன்னது (மத்தேயு 4:8-9). இந்த “உயர்ந்த மலை” யாது என்பது குறித்துப் பல விளக்கங்கள் தரப்படுகின்றன. அவை:

எருசலேம் நகரிலிருந்து எரிக்கோ நகருக்குச் சென்ற சாலையில் ஒரு சுண்ணாம்புக் கல் குன்று உள்ளது. அது “குவாராந்தானியா குன்று” என்று அழைக்கப்படுகிறது. அலகை இயேசுவை அக்குன்றின்மேல் நிறுத்தி சோதித்திருக்கலாம்.[21]

ஜாண் கால்வின் இயேசுவை அலகை ஓர் “உயர்ந்த இடத்திற்குக் கொண்டுசென்று” உலக அரசுகளைக் காட்டி, அவரை சோதித்தது என்று கூறுகிறார். ஜெனீவா விவிலியம் அவ்வாறே மொழிபெயர்க்கிறது.

”உலக அரசுகள்” என்பது நிலப்பகுதியை அல்ல, மாறாக “உலகை ஆளுகின்ற அதிகாரம்” என்ற பொருளைக் குறிக்கிறது.

”உலக அரசுகள் அனைத்தையும்” அலகை காட்டியது என்னும்போது, இயேசுவின் காலத்தில் அக்கூற்று ஒரு சிறு நிலப்பகுதியையே குறித்தது. எனவே, அதை ஓர் உயர்ந்த இடத்திலிருந்து பார்க்க முடிந்தது. ஆயினும் அமெரிக்காக்கள் மற்றும் ஆஸ்திரேலியா பகுதி மக்களினங்களை இங்கு அடக்க முடியாது.

”உயர்ந்த குன்று” என்பதை எழுத்துக்கு எழுத்து பொருள் கொள்ளலாகாது. சோதனைகள் இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட அனுபவங்களே. அந்த அனுபவங்களையே இயேசு ஓர் உவமை வழியாக எடுத்துக் கூறினார்.[22]

இயேசு தன்முன்னால் விழுந்து தன்னை வணங்கினால் அவருக்கு உலக அரசுகளைக் கொடுப்பதாகக் கூறி, அலகை அவரை சோதித்தது (மத்தேயு 4:8-9).

அதற்கு இயேசு கொடுத்த பதில் இது: “அகன்று போ, சாத்தானே. ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” (மத்தேயு 4:10).

Similar News