ஆன்மிகம்
தூய பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி
விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மே மாதம் பங்கு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பங்கு பெருவிழா கடந்த 20-ந் தேதி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மறைமாவட்ட முதன்மை குரு ஞானபிரகாசம் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து, தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணிக்கு மதுரை பேராயரும், தமிழ்நாடு ஆயர் பேரவை தலைவருமான அந்தோணி தலைமையில், அருட்தந்தையர்கள் பிச்சமுத்து, பாஸ்கல்ராஜ், ஆகியோர் முன்னிலையில் திருவிழா திருப்பலி, உறுதிபூசுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிப்பட்ட தேரில் அன்னை மாதா சொரூபம் வைக்கப்பட்டு, தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாத்திமா பங்குதந்தை ஆரோக்கியதாஸ், மற்றும் பங்கு மக்கள் செந்திருந்தனர்.