ஆன்மிகம்
காவல்கிணறு ஏசுவின் திருஇருதயம் ஆலயம் புனித உபகார அன்னை தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.

ஏசுவின் திருஇருதய ஆலயம் புனித உபகார அன்னை திருவிழா

Published On 2016-05-25 09:24 IST   |   Update On 2016-05-25 09:24:00 IST
காவல்கிணறு ஏசுவின் திருஇருதயம் ஆலயம் புனித உபகார அன்னை திருவிழாவில் தேர் பவனி நடந்தது.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல்கிணறு ஏசுவின் திருஇருதய ஆலயம் புனித உபகார அன்னை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பாடல் திருப்பலியும், மாலை மறையுரை நற்கருணை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடந்தது.

10-ந் திருநாளான நேற்று காலை 5 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும், உறுதி பூசுதல் விழாவும் நடந்தது. திருவிழா திருப்பலியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு தேர் பவனியும், தொடர்ந்து இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

விழா ஏற்பாடுகளை பங்கு குரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அன்பியங்கள் மற்றும் பக்த சபையினர் செய்திருந்தனர்.

Similar News